ஆதியாகமம் 4:1கர்த்தரால் ஒரு மனுஷன்
ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.
Genesis 4:1
கர்த்தரால் ஒரு மனுஷன்
ஏதேன் தோட்டத்தை விட்டு வந்த பின், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் முதல் பிள்ளை பிறந்த நாள் இது. காயீன் பிறந்தபோது ஏவாள் 'கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்' என்று சொன்னாள் பாருங்கள். துன்பத்தில் வாழ்ந்தாலும், பிள்ளை பிறப்பு கர்த்தரிடமிருந்து வரும் வரம் என்பதை அவள் மறக்கவில்லை. வாழ்க்கை கடினமாக இருந்தாலும், ஒவ்வொரு பிள்ளையும் தேவனுடைய கையின் வேலை என்பதை நாமும் நினைவில் வைக்கலாம்.
