ஏசாயா 58:4சண்டைக்கான உபவாசம்
இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்
Isaiah 58:4
சண்டைக்கான உபவாசம்
உபவாசம் செய்யும் அதே நாளில் அவர்கள் சண்டை போட்டார்கள், துஷ்டத்தனமான கையால் மற்றவரை அடித்தார்கள். இது என்ன வித உபவாசம்? கை நீட்டி அடித்துவிட்டு வாய் நீட்டி ஜெபிப்பது இரட்டை வேஷம். 'உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய்' என்று அவர்கள் நினைத்தாலும் அந்த கூக்குரல் தேவன் காதில் விழவே இல்லை. சண்டையுள்ள இதயத்தில் இருந்து ஜெபம் மேலே செல்லாது.
