ஏசாயா 58:9நான் இருக்கிறேன்
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும் நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,
Isaiah 58:9
நான் இருக்கிறேன்
அப்போது கூப்பிட்டால் தேவன் மறுஉத்தரவு கொடுப்பார், 'இதோ, நான் இருக்கிறேன்' என்று சொல்வார். ஆனால் அதற்கு முன் நுகத்தடியையும், விரல் நீட்டி குற்றம் சாட்டுதலையும், தூஷண பேச்சையும் நம் நடுவிலிருந்து அகற்ற வேண்டும். அநீதி இருக்கும் வரை ஜெபம் மட்டும் தேவனை நெருங்கவைக்காது. இதயத்தில் இருக்கும் கடினத்தை அகற்றும்போதே தேவன் அருகில் வருகிறார்.
