எரேமியா 3:7திரும்பாத சகோதரி
அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.
Jeremiah 3:7
திரும்பாத சகோதரி
தேவன் இஸ்ரவேலிடம் திரும்பிவா என்று சொல்லியும், அவள் திரும்பவில்லை. இதைப் பார்த்த யூதா, தன் சகோதரி பட்ட தண்டனையிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும், ஆனால் அப்படி நடக்கவில்லை. மறுபடி துரோகி என்ற பட்டப்பெயரே யூதாவுக்குக் கொடுக்கப்படுகிறது. மற்றவர்களின் தவறு நமக்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதே இங்கே தெளிவான உண்மை.
