எரேமியா 42:6நன்மையானாலும் தீமையானாலும்
அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.
Jeremiah 42:6
நன்மையானாலும் தீமையானாலும்
கர்த்தருடைய பதில் நன்மையானாலும் தீமையானாலும் அதற்குக் கீழ்ப்படிவோம் என்று மக்கள் உரத்துச் சொன்னார்கள். 'எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி' என்ற வார்த்தையில் நம்பிக்கையும் தொனிக்கிறது. இது கேட்க அழகான வாக்குறுதி. ஆனால் இந்த அதிகாரம் முடிவில் இந்த வார்த்தைகள் காற்றில் கரைந்துபோவதைப் பார்க்கப்போகிறோம் - சொன்னதைச் செய்வதே கடினமான உண்மை.
