யோபு 21:25சந்தோஷமின்றி மரிப்போர்
வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்தோடே சாப்பிடாமல் மனக்கிலேசத்தோடே சாகிறான்.
Job 21:25
சந்தோஷமின்றி மரிப்போர்
வேறொருவனோ ஒரு நாளும் சந்தோஷமாக சாப்பிடாமல், மனக்கிலேசத்துடன் இறக்கிறான் என்று யோபு சொல்கிறார். இது யோபு தன் சொந்த நிலையையே வர்ணிக்கிறார் என்று தோன்றுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கை முறைகளை அவர் அருகருகே வைத்துப் பார்க்கிறார். இரண்டும் நேர்மையான தேவனுடைய திட்டத்தில் எப்படி பொருந்துகிறது என்பதே அவருடைய கேள்வி.
