யோபு 25:4சுத்தமான மனிதன் யார்?
இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
Job 25:4
சுத்தமான மனிதன் யார்?
பில்தாத் இங்கே கேட்கும் கேள்வி — மனுஷன் தேவனுக்கு முன்பாக எப்படி நீதிமானாக இருக்க முடியும் என்பது — உண்மையிலேயே ஆழமான கேள்வி தான். ஆனால் அவர் இதைக் கேட்பது யோபுவைத் தாழ்த்தும் நோக்கத்திலேயே, யோபு பாபம் செய்திருக்கிறார் என்று மறைமுகமாய்க் குற்றம் சாட்டுகிறார். இதே கேள்வியை ஏலிபாஸும் முன்பு கேட்டிருந்தார் (யோபு 4:17). மனுஷனின் பாவத்தை மட்டும் பார்த்து, தேவனுடைய கிருபையை மறந்துவிடும் வாதம் இது.
