யோபு 27:2தேவனுடைய ஜீவனைக்கொண்டு
என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,
Job 27:2
தேவனுடைய ஜீவனைக்கொண்டு
யோபு தன்னை நியாயந்தீர்க்கிறவரையே சாட்சியாக வைத்து ஆணையிடுகிறார் - எவ்வளவு விசித்திரமான நம்பிக்கை பாருங்கள். தன் நியாயத்தைத் தள்ளிவிட்ட தேவனுடைய ஜீவனைக்கொண்டே தான் உண்மை சொல்கிறேன் என்கிறார். வேதனையிலும் தேவனை விட்டு விலகவில்லை, தேவனையே சாட்சியாக்குகிறார். இதுவே யோபுவின் விசுவாசத்தின் ஆழம்.
