யோபு 34:23மிஞ்சினதைச் சுமத்தாதவர்
மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார்.
Job 34:23
மிஞ்சினதைச் சுமத்தாதவர்
மனுஷன் தேவனோடு வழக்காடும்படி அவர் தேவை இல்லாததை சுமத்தமாட்டார் என்று எலிகூ சொல்கிறார். தேவனுடைய நியாயத்தீர்ப்பு நேரம் தவறாதது, அளவும் தவறாதது என்பதே இவரின் கருத்து. இது உண்மையான போதனை என்றாலும், யோபுவின் நிலைமையை இது முழுவதுமாக விளக்குவதில்லை என்பதை நூல் முடிவில் நாம் காண்போம்.
