யோபு 35:11கீதம் பாட அருள்செய்பவர்
என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.
Job 35:11
கீதம் பாட அருள்செய்பவர்
தன்னை உண்டாக்கியவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமான தேவனை எவனும் தேடிக் கேட்பதில்லை என்று எலிகூ வேதனையுடன் சொல்கிறார். இருள் நேரத்திலும் மனுஷனுக்கு பாட ஏதோ ஒரு காரணத்தை தேவன் தருகிறார் - இது ஒரு அழகான சிந்தனை. துன்பத்தில் இருக்கும்போதே, இரவின் இருளிலும் தேவன் நமக்கு ஒரு பாட்டைத் தந்திருக்கலாம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
