யோபு 39:12களஞ்சியத்தில் சேர்க்குமா
உன் தானியத்தை அது உன் வீட்டில் கொண்டுவந்து, உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ?
Job 39:12
களஞ்சியத்தில் சேர்க்குமா
தானியத்தை வீட்டுக்குக் கொண்டுவந்து களஞ்சியத்தில் சேர்க்குமென்று காண்டாமிருகத்தை நம்ப முடியுமா என்று கேட்கிறார். மனிதனுடைய பயிர்த் தொழிலுக்கு அது ஒத்துழைக்க மாட்டாது. மனிதன் தன் வசதிக்காக இயற்கையை முழுவதும் பயன்படுத்த முடியாது என்பதை இது தெளிவாய்க் காட்டுகிறது. நம் திட்டங்களுக்கு எல்லாம் அடிபணிய வேண்டும் என்று படைப்பு எதிர்பார்க்கவில்லை.
