யோபு 5:1பரிசுத்தவான் யார் துணை
இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்.
Job 5:1
பரிசுத்தவான் யார் துணை
எலிபாஸ் யோபுவைக் கேலி செய்கிற தொனியில் பேசுகிறார். ‘கூப்பிடும் பார்ப்போம், யார் உமக்கு பதில் தருவார்கள்’ என்று கேட்கிறார். தேவதூதர்களிலும் பரிசுத்தவான்களிலும் யாரிடமும் யோபுவுக்கு உதவி கிடைக்காது என்பது அவரது எண்ணம். ஆனால் இது எலிபாஸின் தப்பான யூகம் மட்டுமே, தேவனுடைய வார்த்தை அல்ல. இப்படி நண்பர்கள் வாயில் வரும் வார்த்தைகள் எல்லாம் உண்மை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வோம்.
