யோபு 5:9ஆராயமுடியாத அதிசயங்கள்
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
Job 5:9
ஆராயமுடியாத அதிசயங்கள்
எலிபாஸ் இப்போது தேவனுடைய பெருமையைப் புகழத் தொடங்குகிறார். ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் தேவன் செய்கிறார் என்கிறார். இது முற்றிலும் உண்மையான வார்த்தை, தேவனுடைய வல்லமையையும் ஞானத்தையும் நினைவூட்டுகிறது. இந்த அத்தியாயத்தின் பிற்பகுதி முழுவதும் இந்த தேவனுடைய பெருமையையே எலிபாஸ் விவரிக்கப் போகிறார்.
