யோசுவா 10:6கில்காலுக்கு அழைப்பு
அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை இரட்சித்து, எங்களுக்குத் துணை செய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாகக் கூடினார்கள் என்று சொல்லச் சொன்னார்கள்.
Joshua 10:6
கில்காலுக்கு அழைப்பு
கிபியோன் மக்கள் தங்களை காப்பாற்றுமாறு யோசுவாவிடம் தூதுவரை அனுப்பினார்கள். 'உமது அடியாரைக் கைவிடாமல்' என்ற அவர்களின் மன்றாட்டில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் கலந்திருக்கிறது. இஸ்ரவேல் அவர்களுடன் செய்த உறுதிமொழியை மறவாமல் நிறைவேற்ற வேண்டிய கடமையில் நிற்கிறது.
