லூக்கா 23:34பிதாவே மன்னியும்
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
Luke 23:34
பிதாவே மன்னியும்
சிலுவையின் மேல் அந்த வேதனையிலும் இயேசு முதலாவது சொன்ன வார்த்தை மன்னிப்புக்காக இருந்தது. 'பிதாவே இவர்களுக்கு மன்னியும்' என்று அவர் தன்னை சிலுவையில் அறைந்தவர்களுக்காக ஜெபித்தார். தன்னைத் துன்புறுத்தியவர்களை மன்னிக்கும் இந்த அன்பு மனிதனுக்கு அசாத்தியமான ஒரு உயர்ந்த அன்பு. அதே நேரம் அவருடைய வஸ்திரங்களை பங்கிட்டு சீட்டு போட்ட அவர்கள், தாங்கள் என்ன செய்கிறார்கள் என்று அறியாதிருந்தார்கள்.
