மாற்கு 15:34கைவிட்டீரோ தேவனே
ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
Mark 15:34
கைவிட்டீரோ தேவனே
‘எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி’ — 'என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்' என்று இயேசு உரக்க கூப்பிட்டார். இது சங்கீதம் 22:1-ல் ஏற்கனவே தீர்க்கதரிசனமாக எழுதப்பட்ட வார்த்தை. உலகத்தின் பாவத்தை தன் மேல் ஏற்றுக்கொண்ட அந்த தருணத்தில் அவர் அனுபவித்த ஆவியின் தனிமையை இந்த கூக்குரல் நமக்குக் காட்டுகிறது.
