மாற்கு 3:34புதிய குடும்பம்
தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
Mark 3:34
புதிய குடும்பம்
தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களை பார்த்து 'இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே' என்று இயேசு சொன்னார். ஏழையோ செல்வந்தரோ, ஆண் பெண் என்ற வித்தியாசமில்லாமல், தம்மைச் சூழ இருந்த ஒவ்வொருவரையும் தன் குடும்பமாக அறிவித்தார். இது புதிய, விசாலமான குடும்ப வரையறை. கடவுளின் குடும்பம் ரத்தத்தால் அல்ல, இருதயத்தால் கட்டப்படுகிறது.
