மாற்கு 5:35பிள்ளை மரித்துப்போனாள்
அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள்.
Mark 5:35
பிள்ளை மரித்துப்போனாள்
இயேசு இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, யவீருவின் வீட்டிலிருந்து அவனுடைய பிள்ளை மரித்துப்போனதாக செய்தி வந்தது. ஒரு அற்புதம் நடந்த சந்தோஷத்தின் நடுவேதான் இந்த கடுமையான செய்தி வந்தது. யவீருவுக்கு இது எவ்வளவு பெரிய இருள் நிறைந்த நேரமாக இருந்திருக்கும்!
