மாற்கு 5:34மகளே, சுகமாயிரு
அவர் அவளைப் பார்த்து: மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.
Mark 5:34
மகளே, சுகமாயிரு
இயேசு அவளைப் பார்த்து, 'உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது' என்று சொல்லி, சமாதானத்தோடு போகச் சொன்னார். ‘மகளே’ என்று அழைத்தது எத்தனை அன்பான வார்த்தை - பன்னிரண்டு வருஷமாய் அசுத்தமானவளாகக் கருதப்பட்டவளை இயேசு தன் சொந்த குடும்பத்தினளாக ஏற்றுக்கொண்டார். அவளுடைய உடல் மட்டும் அல்ல, அவளுடைய ஆத்துமாவும் சமாதானம் பெற்றது.
