மத்தேயு 13:44நிலத்தில் புதைந்த பொக்கிஷம்
அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப் பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.
Matthew 13:44
நிலத்தில் புதைந்த பொக்கிஷம்
பாலஸ்தீனத்தில் அந்நாட்களில் போர் வரும் நேரங்களில் மக்கள் தங்கள் விலையுள்ள பொருட்களை நிலத்தில் புதைப்பது வழக்கம். யாரோ ஒருவன் வேலை செய்யும்போது தற்செயலாக அப்படி புதைந்திருந்த பொக்கிஷத்தைக் கண்டுபிடிக்கிறான். அதைப் பெற வேண்டும் என்ற ஆசையில், அவன் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் விற்றுவிடுகிறான். பரலோக ராஜ்யத்தைக் கண்டவனும் இப்படியே - அதைப் பெற எல்லாவற்றையும் விட்டுவிட ஒரு தயக்கமும் இல்லாத மகிழ்ச்சி வரும்.
