மத்தேயு 13:45முத்து தேடும் வியாபாரி
மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது.
Matthew 13:45
முத்து தேடும் வியாபாரி
முந்தின உவமையில் பொக்கிஷம் தற்செயலாக கிடைத்தது; இதில் வியாபாரி அறிந்தே தேடிக் கொண்டிருக்கிறான். நல்ல முத்துக்களைத் தேடி பயணம் செய்யும் இந்த மனிதன், தன் தொழிலிலே நிபுணன். பரலோக ராஜ்யத்தை உண்மையாக தேடும் ஒவ்வொருவரும் இந்த வியாபாரியைப் போலவே - தேடுதலில் ஈர்ப்பு உள்ளவர்கள்.
