மத்தேயு 18:21பேதுருவின் கேள்வி
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.
Matthew 18:21
பேதுருவின் கேள்வி
பேதுரு ஆண்டவரிடம் வந்து, சகோதரன் குற்றம் செய்தால் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும் என்று கேட்டார். ஏழுதரம் என்று அவர் யோசித்தது கூட அந்த காலத்து ரபிக்களின் கருத்தை விட அதிகமாக இருந்தது - அன்று மூன்று தரம் மன்னிப்பதே பெருந்தன்மையாக கருதப்பட்டது. பேதுரு தன்னை பெருந்தன்மையானவனாக நினைத்திருக்கலாம். இயேசுவின் பதில் அவரை அதிசயிக்க வைத்திருக்கும்.
