மத்தேயு 18:22ஏழெழுபது தரம்
அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
Matthew 18:22
ஏழெழுபது தரம்
'ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபதுதரமட்டும்' என்று இயேசு பதில் சொன்னார். இது ஒரு கணக்கு வைத்து 490 தரம் மன்னிக்கச் சொல்வதல்ல; மன்னிப்புக்கு எல்லையே இல்லை என்பதைச் சொல்லும் வழி. மனசில் கணக்கு வைத்திருக்கும் மன்னிப்பு உண்மையான மன்னிப்பே அல்ல. அடுத்த உபமானத்தில் இயேசு இதை இன்னும் தெளிவாக விளக்குகிறார்.
