நெகேமியா 12:42சத்தமாய்ப் பாடின பாடகர்
மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும் அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும சத்தமாய்ப் பாடினார்கள்.
Nehemiah 12:42
சத்தமாய்ப் பாடின பாடகர்
இன்னும் எட்டு பேர்களின் பெயர்களைப் பார்க்கிறோம், அவர்களும் இந்த ஊர்வலத்தில் நின்றார்கள். யெஷரகியா என்பவர் பாடகர் குழுவை நடத்தினார். இரண்டு பெரிய குழுக்களும் ஒன்றுசேர்ந்து சுவரின் மேலிருந்து 'சத்தமாய்ப் பாடினார்கள்'. மனித குரல்கள் எல்லாம் ஒன்றாகி தேவனை மகிமைப்படுத்தும்போது, அது எத்தனை அழகான காட்சியாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
