பிலிப்பியர் 3:1கர்த்தருக்குள் சந்தோஷம்
மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.
Philippians 3:1
கர்த்தருக்குள் சந்தோஷம்
பவுல் இப்போது சிறையில் இருந்து இந்த கடிதத்தை எழுதுகிறார். ஆனாலும் அவர் முதலில் சொல்வது சந்தோஷப்படுங்கள் என்பதே. 'கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள்' என்பது சூழ்நிலையைப் பொருத்த சந்தோஷம் அல்ல, கர்த்தரில் நிலைத்திருக்கும் சந்தோஷம். இதையே திரும்பத் திரும்பச் சொல்வது தனக்கு வருத்தமல்ல, பிலிப்பியருக்கு அது பாதுகாப்பு என்று அவர் நினைக்கிறார். நமக்கும் இதே சந்தோஷம் ஒரு காவலாக இருக்கும்.
