நீதிமொழிகள் 12:23அடக்கிவைத்த அறிவு
விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.
Proverbs 12:23
அடக்கிவைத்த அறிவு
விவேகமுள்ள மனுஷன் தனக்குத் தெரிந்ததை எல்லாம் உடனே கொட்டிவிடமாட்டான், அவன் அறிவை அடக்கி வைப்பான். ஆனால் மூடருடைய இருதயமோ தன் மதியீனத்தையே பறைசாற்றி விடும். எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருக்க கற்றுக்கொள்வதே உண்மையான ஞானம். தேவையில்லாதபோது பேசாமலிருப்பதே பெரிய அறிவின் அடையாளம்.
