நீதிமொழிகள் 12:24ஆளுகை செய்யும் கை
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான்.
Proverbs 12:24
ஆளுகை செய்யும் கை
ஜாக்கிரதையோடு உழைக்கும் கை எப்போதும் ஆளுகைச் செய்யும் இடத்திற்கு வந்தடையும். ஆனால் சோம்பேறியோ, மற்றவருக்கு பகுதிகட்டி வேலைசெய்யும் நிலைக்கே தள்ளப்படுவான். உழைப்பும் விடாமுயற்சியும் ஒருவனை உயர்த்துகிறது, சோம்பல் அவனை தாழ்த்துகிறது. கடின உழைப்பே எதிர்காலத்தின் திறவுகோல்.
