நீதிமொழிகள் 22:1பொன்னை விட நல்ல பெயர்
திரளான ஐசுவரியத்தைப்பார்ககிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்.
Proverbs 22:1
பொன்னை விட நல்ல பெயர்
பொன்னும் வெள்ளியும் ஒரு தலைமுறையில் தேய்ந்துபோகும். ஆனால் 'நற்கீர்த்தி' என்பது ஒரு மனுஷன் இறந்த பின்னும் அவனுடைய பிள்ளைகளுக்குச் சொத்தாக நிற்கும். சாலொமோன் இங்கே பணத்தைவிட மனுஷனுடைய குணத்தையும் அவன் மற்றவரோடு வாழும் விதத்தையும் உயர்த்திக் காட்டுகிறார். செல்வம் கையை விட்டுப் போகலாம், ஆனால் யாருடைய நம்பிக்கையையும் இழக்காத பெயர் நிலைத்திருக்கும். நம் பிள்ளைகளுக்கு நாம் விட்டுச்செல்லும் மிகச் சிறந்த சொத்து நம் நல்ல பெயரே.
