சங்கீதம் 16:4வேறு தேவர்களை விட்டு
அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்.
Psalms 16:4
வேறு தேவர்களை விட்டு
அக்காலத்தில் இஸ்ரவேலரைச் சுற்றி அந்நிய தேவர்களை வணங்கும் நாடுகள் இருந்தன, அவர்கள் இரத்த பலிகளும் செலுத்தினர். தாவீது தெளிவாகச் சொல்கிறார் - அப்படிப்பட்டவர்களுக்கு வேதனை பெருகும், தான் அதில் பங்கு கொள்ளமாட்டேன் என்று. 'அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்' என்பது எவ்வளவு தீர்மானமான வார்த்தை. ஒரே தேவனிடம் மாத்திரம் நம் விசுவாசத்தை வைப்பதே நமக்கும் நிலைப்பு தரும்.
