சங்கீதம் 34:1எப்போதும் துதி
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.
Psalms 34:1
எப்போதும் துதி
தாவீது இந்தப் பாட்டை எழுதும்போது ஆபிமெலேக்கிடமிருந்து தப்பி ஓடி வந்திருந்தார், உயிருக்கு பயந்து ஓடிய நேரம். அப்படியிருந்தும் பாருங்கள், அவர் வாய் சொல்வது புலம்பல் அல்ல, 'எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்' என்கிற முடிவு. கஷ்டம் வந்தாலும் போனாலும் நாக்கில் துதி மாறாமல் இருக்கவேண்டும் என்பதை அவர் தன் வாழ்க்கையிலே காட்டுகிறார். இதுவே விசுவாசியின் அடையாளம் - சூழ்நிலை மாறினாலும் பாட்டு நிற்காது.
