சங்கீதம் 34:3ஒன்றாய் உயர்த்துவோம்
என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.
Psalms 34:3
ஒன்றாய் உயர்த்துவோம்
தன் ஒருவனுடைய துதி மட்டும் தாவீதுக்குப் போதவில்லை. 'என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்' என்று மற்றவர்களையும் அழைக்கிறார். ஆராதனை என்பது தனிமையான காரியம் அல்ல, சேர்ந்திருப்பவர்கள் எல்லாரும் ஒரே குரலில் கர்த்தரின் நாமத்தை உயர்த்தும்போது அதற்கு தனியான வல்லமை இருக்கிறது. கூட்டாக துதிக்கும் பழக்கம் நம் குடும்பங்களிலும் இருக்கவேண்டும்.
