சங்கீதம் 61:3அடைக்கலமும் துருகமும்
நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.
Psalms 61:3
அடைக்கலமும் துருகமும்
முன்பே அனுபவித்த காரியத்தை நினைவுகூர்ந்து சொல்கிறார் - 'நீர் என் அடைக்கலமும் துருகமுமாய் இருந்தீர்' என்று. சத்துருவின் தாக்குதலுக்கு எதிரே பெலத்த கோட்டையாக தேவன் இருந்ததை தாவீது அனுபவப்பூர்வமாக அறிந்திருந்தார். கடந்தகால காப்பாற்றுதலை நினைவுகூர்வது, இப்போதைய நம்பிக்கைக்கு அஸ்திபாரம். நமக்கும் இப்படி நினைவுகூரும் தினங்கள் தேவை.
