ரூத் 2:18மாமியாருக்கு கொண்டு வந்தாள்
அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்.
Ruth 2:18
மாமியாருக்கு கொண்டு வந்தாள்
ரூத் தான் பொறுக்கினதை ஊருக்குள் கொண்டு வந்து நகோமியிடம் காட்டுகிறாள். மேலும் தான் திருப்தியாக சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து மாமியாருக்குக் கொடுக்கிறாள். ஒரு நாள் முழுவதும் உழைத்த பின்னும் தான் மட்டும் சாப்பிடாமல் மாமியாரையும் நினைக்கும் இவளுடைய அன்பு எவ்வளவு அழகானது.
