ரூத் 2:4கர்த்தர் உங்களோடே இருப்பாராக
அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்.
Ruth 2:4
கர்த்தர் உங்களோடே இருப்பாராக
போவாஸ் தன் வயலுக்கு வந்தபோது முதலில் சொன்ன வார்த்தை 'கர்த்தர் உங்களோடே இருப்பாராக' என்பது. இது வெறும் வழக்கமான வணக்கம் அல்ல, இவருடைய இயல்பான தேவபக்தியின் வெளிப்பாடு. வேலைக்காரரும் அதே அன்போடு பதில் சொல்கிறார்கள். ஒரு வீட்டு எஜமானன் தன் வேலையாட்களோடு எப்படி பேசுகிறான் என்பதே அவனுடைய இருதயத்தைக் காட்டும்.
