தீத்து 3:15கிருபை உங்களோடு
என்னோடிருக்கிற யாவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
Titus 3:15
கிருபை உங்களோடு
பவுலின் இந்த கடிதம் அன்பான வாழ்த்துக்களோடு முடிகிறது, அவரோடு இருந்தவர்கள் தீத்துவிற்கு வாழ்த்துதல் சொல்கிறார்கள், விசுவாசத்தில் நேசிக்கிறவர்களுக்கும் வாழ்த்துதல் சொல்லும்படி கேட்கிறார். கடைசி வார்த்தையாக, 'கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக' என்று ஆசீர்வதிக்கிறார். கடிதம் முழுவதும் கிருபையைப் பற்றி பேசியவர், அதே கிருபையோடு அதை முடிக்கிறார். நம் வாழ்வின் ஆரம்பமும் முடிவும் அந்தக் கிருபையே.
