1 இராஜாக்கள் 21:3கர்த்தர் காக்கும் சுதந்தரம்
நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான்.
1 Kings 21:3
கர்த்தர் காக்கும் சுதந்தரம்
நாபோத் மறுத்தான் என்றால் அது வெறும் பிடிவாதம் அல்ல. இஸ்ரவேலில் பிதாக்களின் நிலம் விற்கக்கூடாது என்பது தேவனுடைய சட்டம். 'கர்த்தர் என்னைக் காப்பாராக' என்று அவன் சொன்னது, தன் நம்பிக்கை கர்த்தர் மேல்தான் என்பதை காட்டுகிறது. ராஜாவின் முகத்திற்கு முன்னும் தன் விசுவாசத்தை விடாமல் பிடித்துக் கொண்ட ஒரு சாதாரண மனுஷனின் தைரியம் இது.
