யோபு 34:32காணாத காரியத்தை போதியும்
நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.
Job 34:32
காணாத காரியத்தை போதியும்
‘நான் காணாத காரியத்தை நீர் எனக்கு போதியும்’ என்று யோபு தேவனிடம் சொல்ல வேண்டும் என்று எலிகூ சொல்கிறார். இது ஒரு நல்ல மனநிலையை காட்டும் வார்த்தைகள் என்றாலும், இதை யோபுவின் மேல் திணிப்பது சரியல்ல. உண்மையில் தேவன் பின்னாட்களில் யோபுவுடன் நேரடியாக பேசும்போது, இந்த அணுகுமுறையை பயன்படுத்தவில்லை - யோபு 38:1-3 இதை காட்டுகிறது.
