லூக்கா 16:8ஒளியின் பிள்ளைகள்
அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.
Luke 16:8
ஒளியின் பிள்ளைகள்
எஜமான் அவன் அநீதி செய்தான் என்று அறிந்தும், அவன் புத்தியாகச் செய்தான் என்று மெச்சிக்கொள்கிறார். இயேசு இங்கே அவனது நேர்மையையை அல்ல, அவனது முன்யோசனையையே பாராட்டுகிறார். 'ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்' என்று சொல்லி, உலகத்தார் தங்கள் காரியங்களில் காட்டும் கருத்துவைப்பு, விசுவாசிகள் ஆவிக்குரிய காரியங்களில் காட்ட வேண்டும் என்பதை அவர் நினைவூட்டுகிறார்.
