சங்கீதம் 144:1போருக்குப் பயிற்சி தரும் கை
என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Psalms 144:1
போருக்குப் பயிற்சி தரும் கை
தாவீது ராஜாவாக இருக்கும்போது எத்தனையோ போர்களைச் சந்தித்திருக்கிறார். தன் கைகளின் பலமோ, விரல்களின் வித்தையோ அல்ல வெற்றியைத் தந்தது என்று அவர் அறிந்திருந்தார். 'என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று சொல்லும்போது, தன் கையைப் பயிற்றுவித்த கர்த்தரையே அவர் மகிமைப்படுத்துகிறார். நம் வாழ்க்கையிலும் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் பின்னால் கர்த்தருடைய கை இருப்பதை உணரும்போது நமக்கும் இப்படி நன்றி பொங்கும்.
